History





புனித மரி ஆர்.சி துவக்கப்பள்ளி
மாரப்பநாயக்கன்பட்டி

வரலாறு:
         ஆரம்ப கலத்தில் மாரப்பநாயக்கன்பட்டி தனிப்பங்காக இருந்தது.Rev.Fr.Blom, Rev.Fr.Henry Brunier, Rev.Fr.Maria Thekkadam,Fr.Moviel  பொன்றோர் இங்கு பங்கு குருக்களாக பணியாற்றியுள்ளனர்.அவர்களுக்குப்பின் இப்பங்கு நாமக்கல் புதிய பங்குடன் இணைக்கப்பட்டது.ஆரம்பகாலத்தில் அருட்திரு.ப்ளோம் அடிகளார் இப்பகுதியில் தங்கி இங்குள்ள  இங்குள்ள மக்களுக்கு தச்சு வேலைப் பயிற்சி அளித்துள்ளார்.இங்கு இயங்கி வந்த புனித தெரஸா தச்சுவேலைப் பயிற்சிக்கூடமானது பிற்காலத்தில் சேலம் ஆயர் இல்ல வளாகத்திற்கு மாற்றப்பட்டதாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.இங்கு இயங்கி வந்த தச்சு வேலைப்பயிற்சி கூடத்தின் வாயிலாகவே நாமக்கல்லில் “லாரி பாடி பில்டிங்” தொழில் வளர்ச்சியடைந்ததாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.நாமக்கல் மாவட்டத்தில் முதன் முதலாக மறைபரப்புப் பணி ஆரம்பிக்கப்பட்ட மாரப்பநாயக்கன்பட்டியில் தற்போது கிறிஸ்துவ குடும்பங்கள் அரிதாகிவிட்டது.

பள்ளிதுவக்கம் மற்றும் வளர்ச்சி:
                                    இப்பள்ளி 17.06.1942-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது.11.06.1976-வரை  கூரைக்கட்டிடத்தில் இயங்கி வந்த பள்ளி 12.06.1976-முதல் மேதகு.பி.மைக்கேல் போஸ்கோ துரைசாமி ஆயர் அவர்களால் புதிய ஓட்டுக்கட்டிடம் கட்டப்பட்டு ஆலயமாகவும்,பள்ளியாகவும் செயல்பட்டது.அப்போதைய நாமக்கல் பங்குத்தந்தையாக இருந்தவர் அருட்திரு.அல்போன்ஸ் அடிகளார். 04.10.2009-வரை பழைய ஓட்டுக்கட்டிடத்தில் இயங்கிவந்த பள்ளியானது.05.10.2009 முதல் நமக்குநாமே திட்டத்தின் வாயிலாக கட்டப்பட்ட புதிய டார்ச்சு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.விழாவிற்கு தலைமை தாங்கியவர் உயர்திரு.உ.சகாயம் இ.ஆ.ப அவர்கள் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து ஆசிர்வதித்தவர் மேதகு.டாக்டர்.செ.சிங்கராயன் சேலம் மறைமாவட்ட ஆயர் அவர்கள்.முன்னிலை அர்ட்திரு.எஸ்.சவரி அடிகளார்.ஆரம்பத்தில் இரு ஆசிரியர்களைக்கொண்டு துவங்கப்பட்ட பள்ளியானது நான்கு ஆசிரியர்களைக்கொண்டு பயிற்றுவிக்கப்பட்டு தற்போது அரசு விதிகளின் படி ஈராசிரியர் பள்ளியாக செயல்படுகிறது.தற்போது பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 28 .ஆசிரியர்கள் இருவர் பணியாற்றுகின்றனர்.தற்போது பள்ளியில் கிறிஸ்துவ மாணவர்கள் எவருமில்லை.இருப்பினும் மாணவர்களுக்கு மாலை 3:30 மணியளவில் நீதிபோதனை கற்பிக்கப்படுகிறது.எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் மாலை வேளையில் கூட்டு உடற்பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது.அரசு விழாக்களின் போது   அணிவகுப்பு மரியாதை சிறப்பு விருந்தினர்களுக்கு அளிக்கப்படுகிறது.மதிய வேளையில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.எர்ணாபுரம்.செங்கோடம்பாளையத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் விலையில்லா அரசுப்பேருந்தில் வருகின்றனர்.அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் பெற்று வழங்கப்படுகிறது.பள்ளியின் பயின்ற பல முன்னாள் மாணவர்களும் தற்போது பல துறைகளிலும் உயர் பதவி வகிக்கிறார்கள்.முன்னாள் மாணவர்களால் பள்ளிக்கு மின்விசிறி, RO WATER SYSTEM ,COMPUTER போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளியில் இதுவரை பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள்:

1.திரு.ஆரோக்கியசாமி
2.திருமதி.தங்கம்மாள்
3.திரு.சஞ்சீவி
4.திரு.ஜெகநாதன்
5.திரு.அருள்பிரகாசம்
6.திரு.ராமச்சந்திரன்
7.திரு.அமலதாஸ்
8.திரு.பெருமாள்
9.திரு.அய்யாக்கண்ணு
10.திரு.வில்லவராயன்
11.திரு.இலக்குமணன்
12.திரு.ஆசீர்வாதம்
13.திரு.K.சுப்பிரமணியம்
14.திருமதி.ம.கேத்ரீனம்மாள்
15.திரு.அ.பிரான்சிஸ் மரியதாஸ்
16.திரு.அ.பென்ஹர் தினேஷ்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக